கண்டிப்பா…! சிஎஸ்கே அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம் தான்… தோனிக்கு ஏற்பட்ட சிக்கல்…!!! முழு விவரம் இதோ..!!
இந்தியாவில் பல கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்த்த வகையில் ஐபிஎல் 2021 தொடங்கி உள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் என்றாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா போல தான்… !! இந்த ஆண்டு ஐபிஎல் 2021, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சிஎஸ்கே அணி மோசமான பல தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தேர்வாகவில்லை. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் சோகத்தில் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு நிச்சியமாக காம்பேக் தரவேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
நேற்று நடந்த ஐபிஎல்2021யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் 7 விக்கெட் வித்தியசத்தில் வென்றது டெல்லி அணி. அதுமட்டுமின்றி நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் பிராவோ, சாம் கரண், மெயின் அலி, டுபலஸிஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அணியில் விளையாடினர்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுந்துள்ளது இம்ரான் தாகிருக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா ??
ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் இம்ரான் தாகிருக்கு வாய்ப்பு தரவில்லை. அதனால் இந்த ஆண்டாவது ஐபிஎல் 2021யில் இம்ரான் தாகிருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் இப்பொழுது பார்த்தால் நிச்சியமாக வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என்று நிரூபணம் ஆகிவிட்டது.
ஏனென்றால் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டுபலஸிஸ் அணிக்கு மிகவும் முக்கியமானவர். அதுமட்டுமின்றி மீதமுள்ள மூன்று வீரர்கள் ஆன சாம் கரண், மெயின் அலி மற்றும் பிராவோ இவர்கள் அனைவரும் ஆல்- ரவுண்டர்கள். ஆனால் இம்ரான் தாகிர் பவுளர் மட்டும் தான். அதனால் பவுளர் மட்டுமா அல்லது ஆல் – ரவுண்டரா என்று பார்த்தால் நிச்சியமாக ஆல்-ரவுண்டர் தான் தேர்வு செய்வார்கள்….
நிச்சியமாக மக்கள் ஆகிய நமக்கே இவளோ குழப்பம் இருக்கும்போது நிச்சியமாக கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ன செய்யப்போகிறார்… என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.