ஐபிஎல் 2021 போட்டிகளை பார்க்க முடியுமா முடியாதா ??? பிசிசிஐ எடுத்த முடிவு ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021; கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பித்தது. அதுவும் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால் 29 போட்டிகள் நடந்து முடிந்த நேரத்தில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்து அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்துள்ளது பிசிசிஐ. பின்பு எப்போது தான் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி கிடைத்தது.

அதுதான் ஐபிஎல் 2021 மீதமுள்ள 31 போட்டிகள் நடைபெற உள்ள நாட்கள். அது வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் போட்டிக்காக பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் தான் கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் மைதானத்தில் பார்க்க அனுமதி தரவில்லை. இருந்தாலும் தொற்று வீரர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இந்த முறை ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளதால் பிசிசிஐ புதிய ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது.

அது என்ன வென்றால் , ஐபிஎல் 2021 இரண்டாம் பாகத்தை பார்க்க மக்கள் அனுமதி என்றும், ஆனால் 50% ரசிகர்கள் மட்டுமே ஒன்லைன் மூலம் டிக்கெட் வாங்க முடியும் என்றும் கூறியுள்ளது பிசிசிஐ. அதனால் வருகின்ற 19ஆம் தேதி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

அதிலும் குறிப்பான விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஓடு நடைபெற போகிறது ஐபிஎல் 2021 போட்டி. அதனால் நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யார் இந்த முறை கோப்பையை வெல்ல போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.