ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறுமா?? ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்… முழு விவரம்..!

இந்தியாவில் வருகின்ற 9 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டிதான்.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமா இருந்ததால் ,ஐக்கிய அரபு நாட்டில் நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்தபடி, போட்டிகளை நடத்தி முடித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் தான் என்றும் முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

இப்பொழுது எல்லா அவரவர் அணியில் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பல எதிர்பாராத சுவாரஷியமான நிகழ்வுகள் நடக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைய அக்சர் பட்டேல் மும்பை வந்தார். அப்பொழுது வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை படி, தனிமையில் இருந்தார். நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வேலை செய்யும், 8 ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மும்பை கிரிக்கெட் வாரியம், நிச்சியமாக போட்டிகள் மும்பையில் நடைபெறும்.

மீதமுள்ள பணியாளராகள் வைத்து நங்கள் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திக்காட்டுவோம் என்று கூறியுள்ளனர். இருநாட்களுக்கு ஒருமுறை அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும். டெல்லி கேபிட்டல்ஸ் , மும்பை இண்டியன்ஸ் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் தான் பயிற்சி செய்துவருகின்றனர். ஆனால் யாரும் இதுவரை வான்கடே மைதானத்தில் இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதனால் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி எந்த விதமான பிரச்சனை இல்லாமல், போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.