சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மாற்றம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது..! யார் யார் தெரியுமா..?
சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 இரு மாதங்கள் அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி எதிர்கொண்ட பல மோசமான தோல்விகளுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் சரி செய்ய ஐபிஎல் ஏலத்தில் புதிதாக மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதனால் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆகா களமிறங்குவர் என்ற கேள்வி எழுந்தது. ஒரு சிலர் ராபின் உத்தப்பா மற்றும் டுப்ளஸிஸ் என்றும் இன்னும் சில பேர் ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் என்று கூறி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் இரண்டு போட்டிகளில் ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாடி உள்ளார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களிலும் , பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான போட்டியில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். எல்ல அணிகளுக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேனின் ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்று.
இரு போட்டிகளிலும் ருதுராஜ் அவரது ஆட்டத்தை நிரூபிக்காமல் விட்டதால், அவருக்கு பதிலாக வேறொருவர் ஓப்பனிங் செய்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. அப்படி பார்த்தால் சென்னை அணியில் மீதமுள்ள வீர்ரகளின் ராபின் உத்தப்பா தான் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்குவர் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி எப்பொழுதும் 2 அல்லது 3 போட்டிகளில் அவரவர் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுப்பார்.
அதேபோல ருதுராஜ் -க்கு வாய்ப்பு கிடைக்குமா ?? இல்லையா?? சிஎஸ்கே ரசிகர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் 2 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் உள்ளது.