சாம் கரண் சிஎஸ்கே அணியை விட்டு விலகப்போகிறாரா..? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்….!

சாம் கரண் சிஎஸ்கே அணியை விட்டு விலகப்போகிறாரா..? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்….!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2021 நேற்று ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்களின் ஆதரவை பெற்று எல்ல ஆண்டுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நாட்டில் நடந்துள்ளது. அப்பொழுது நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பல மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் நிச்சியமாக காம்பேக் தர வேண்டும் என்று சிஎஸ்கே வீரர்கள் சிறப்பான பயிற்சி செய்து வருகின்றனர். ஏனென்றால் இதுவரை நடந்த 13 ஆண்டுகளில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தான் முதல் போட்டி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு போட்டியில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை, அதனால் பேட்டிங் பகுதியில் வீரர் இல்லாத காரணத்தால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா, மெயின் அலி, ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சாம் கரண் சிஎஸ்கே அணியை விட்டு விலகப்போகிறாரா..? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்….!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டரான சாம் கரனின் விளையாட்டு மிகவும் தேவையான ஒன்று. முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொன்றது. அதில் சாம் கரண் இறுதி நேரத்தில் பேட்டிங் செய்து , 15 பந்தில் 34 ரன்களை விளாசியுள்ளார்.

அதில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி அடித்துள்ளார் சாம். சாம் கரனுக்கு 22 வயதுதான் ஆகியுள்ளது. கொரோனா காலம் முடிந்து ஸ்கூல் ஓபன் செய்துவிட்டார்கள். அதனால் குட்டி குழந்தை சாம் கரண் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி ஸ்கூலுக்கு போக போகிறார் என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.