வீடியோ : சும்மா கையை வீசியது ஒரு குத்தமடா ? விராட்கோலியை கிரிக்கெட் போட்டியில் இருந்து ரத்து செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் ஆவேசம் ;

0

எப்பொழுதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மற்ற போட்டிகளை காட்டிலும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தான் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும். ஆனால் நேற்று நடந்த போட்டி அதற்கு மேல் என்பது தான் உண்மை. இந்திய அம்தரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை இறுதி நேரத்தில் சுமார் 1.5 கோடி மக்கள் ஆன்லைன் -ல் பார்த்துள்ளனர்.

அந்த அளவிற்கு போட்டி நடந்தது தான் உண்மை. போட்டியின் சுருக்கம் : டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் எதிர்பாராத வகையில் கே.எல்.ராகுல் அடித்த அரைசதம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் உபயோகமாக இருந்தது தான் உண்மை. பின்பு விராட்கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 184 ரன்களை அடித்தனர்.

பின்பு 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி. ஆனால், இறுதி ஓவர் வரை நம்பியுடன் விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது இந்திய.

so, even if this did happen, none of the batsmen from bangladesh appealed for this fake fielding 🤺#FakeFielding #NoBall #ViratKohli𓃵 #INDvsBAN #T20WorldCup #Cheating #SuryakumarYadav #KLRahul𓃵 #RohitSharma𓃵 #TeamIndia pic.twitter.com/xKsYgNuc3Z

— Karan Pandya (@KaranPa62440821) November 3, 2022

6.2 ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ் எதிர்கொண்டார். அப்பொழுது பவுண்டரிவரை அடித்த பந்தை அர்ஷதீப் சிங் பிடித்து கீப்பருக்கு வீசினார். இதற்கிடையில், விராட்கோலி தன் கையில் பந்து இருப்பது போல கையை ஸ்டம்ப்– ஐ பார்த்து வீசினார். இது மிகவும் தவறு என்று பங்களாதேஷ் வீரரான நூருல் ஹசன் கூறியுள்ளார்.

ஆனால் ஐசிசி விதி படி முதல் முறை Fake பீல்டிங் செய்தால் எந்த விதமான தண்டனையும் இல்லை என்று உள்ளது. அதனால் இதனை பற்றி ஐசிசி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, ஏதாவது ஒரு போட்டியில் இது போன்ற செயல்கள் நடப்பது சாதாரணம் தான்.

இதற்கிடையில், விராட்கோலி பீல்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் செய்த செயல் இணையத்தை கலக்கி வருகிறது. அதுமட்டுமின்றி, விராட்கோலி செய்தது தவறு என்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ரசிகர்கள் குறி வருகின்றனர். அப்படி என்ன செய்தார் விராட்கோலி ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here