இவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்குமோ? வாய்ப்பை இழக்க போகும் இளம் இந்திய வீரர் ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளனர். அதற்கான இந்திய அணியின் விவரத்தை பற்றி சமீபத்தில் தான் தகவல் வெளியானது. அதில் முதல் டி-20 போட்டிகளில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ.

ஆனால் மீதமுள்ள இரு டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு விளையாட உள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் விளையாடிய ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடிய வீரர் என்றால் ரூட்டுராஜ் கெய்க்வாட் தான்.

ஆமாம், ஐபிஎல் 2021 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பட்டத்தை வென்றார். அதுமட்டுமின்றி, சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிகளிலும், ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமான ஐபிஎல் 2022 போட்டிகளில் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை.

அதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தாமல் விட்டுள்ளார் ரூட்டுராஜ். அதுமட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் விளையாட உள்ளார்.

ஒருவேளை அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்து அதனை சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் நிச்சியமாக அவருக்கான வாய்ப்பு இதற்குமேல் இருக்காது என்பது தான் உண்மை.ஏனென்றால் இப்பொழுது இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ஷிகர் தவான் போன்ற பல வீரர்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகின்றனர்.

அதனால் ருதுராஜ் சரியாக விளையாடவில்லை என்றாலும், இந்திய அணிக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்பது தான் உண்மை..! ஆனால் அதிக திறமை இருந்தும் அதனை சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறாரா ? ரூட்டுராஜ் ?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூட்டுராஜ் கெய்க்வாட் மிகவும் முக்கியமான வீரரா ? அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக பயன்படுத்துவாரா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here