வீடியோ ; தினேஷ் கார்த்திக் செய்த தவறால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி ..! தோனி ..! என்று சத்தம் போட்டனர் ; காரணம் இதோ ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் வரை நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற போட்டியில் இந்திய அணி 4 புள்ளிகளை பெற்ற நிலையில் குரூப் 2 புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் விவரம் :

நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து டார்கெட் செட் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் வழக்கம் போல 9 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் ரோஹித், விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட 20 ஓவர் முடிவில் 179 ரன்களை அடித்தனர்.

பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நெதர்லாந்து. ஆனால் தோல்விதான் மிஞ்சியது. ஏனென்றால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த காரணத்தால் ரன்களை அடிக்கமுடியாமல் தவித்தனர். இறுதி ஓவர் வரை போராடியநெதர்லாந்து அணி 123 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. பாகிஸ்தான் அணியை வென்ற நிலையில் இந்திய அணிக்கு அதிகப்படியான நம்பிக்கையுடன் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் :

கடந்த ஐபிஎல் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாட இடம்கிடைத்தது. அதனால் இப்பொழுது இந்திய அணியின் பினிஷராக விளையாடி வருகிறார். அதனால் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் -க்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

நேற்று நடந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்ய விஷயத்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சரியாக, 7.3 ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை அக்கர்மன் எதிர்கொண்டார். அப்பொழுது சுலபமாக ஸ்டும்ப்பிங் பண்ண வேண்டிய பந்தை தினேஷ் கார்த்திக் மிஸ் செய்தார். அதனால் அக்சர் பட்டேல் கடுப்பில் கத்தினார்.

அதுமட்டுமன்றி, தினேஷ் கார்த்திக் ஸ்டும்ப்பிங் விட்ட காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் தோனி..! தோனி ..1 என்ற சத்தம் போட்டனர். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரரா ? பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை..!

இந்திய அணிக்கு ரிஷாப் பண்ட் ஆ? தினேஷ் கார்த்திக் ஆ? யார் சிறந்த பினிஷராக இருக்க முடியும் ? ப்ளேயிங் 11ல் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here