இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டியே ஆக வேண்டும் ; பாகிஸ்தான் அணிக்கு ஆபத்து தான் ; சல்மான் பட் ஓபன் டாக் ;

0

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணி:

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆமாம், இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கானுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ.

இந்த மூன்று வீரர்களும் ஆசிய கோப்பைக்கான போட்டிகளில் விளையாட உள்ளனர். அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளை எதிர்கொள்ள கூடிய அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வளவு வீரர்கள் உள்ளனர். ஏனென்றால் தொடர்ந்து வீரர்கள் போட்டிகளில் விளையாடி கொண்டே இருக்க முடியாது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய முன்னணி வீரர்களுக்கு ஐம்பாபே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் வீரரின் பேட்டி:

இந்திய அணியில் அதிகமாக வீரர்கள் இருப்பதால் இந்த பிரச்சனை இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறுகையில் ; ஆசிய கோப்பைக்கு முன்பு ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக விளையாட போகிறார். இது ஒரு நல்ல முடிவு. அவ்வப்போது வீரர்களை மாற்றிக்கொண்டு வருவது இந்திய அணிக்கு ஒன்றும் புதிதல்ல.”

“அதுமட்டுமின்றி அவ்வப்போது சீனியர் வீரர்களுக்கு ஓய்வும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. இதனால் முக்கியமான போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்ய கடினமாக தான் இருக்கும். ஆனால் இந்திய அணிக்கு ஆரோக்கியமான விஷயம் தான்.”

வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளருக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் ராகுல் டிராவிட்-க்கு ஓய்வு கொடுத்த காரணத்தால் லட்சுமண் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக வழிநடத்த போகிறார். இந்திய அணியில் அதிகப்படியான வீரர்களை தேர்வு செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இந்திய அணியை பெரிதுபடுத்த முயற்சி செய்கின்றனர், நல்ல விஷயம்.”

“ஆனால் பாகிஸ்தான் அணியில் அப்படி இல்லை ; ஒரு வீரருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பிறகு அந்த இடத்தில் மாற்று வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். ஆனால் முதலில் ஓய்வு எடுத்த வீரரை மீண்டும் அணியில் காண்பது கடினமாக போய்விடுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் இந்திய அணி தெளிவாக உள்ளது. ஆட்களை அதிகப்படுத்துவதற்கு பதிலாக குறுகிக்கொண்டு வருகிறது பாகிஸ்தான் அணி.”

நம்ம பாகிஸ்தானில் இருக்கும் ஆறு அணிகளில் ஏதாவது ஒரு வீரரை பயிற்சியாளராக நியமனம் செய்ய முடியுமா ? நாம் வெளிநாட்டில் இருந்து தான் பயிற்சியாளர்களை நியமனம் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார் சல்மான் பட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here