போட்டி 55: இன்று இரவு சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோத உள்ளனர்.
அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த இரு (டெல்லி மற்றும் சென்னை) அணிகள் விளையாடிய 27முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சென்னை அணி அதிகபட்சமாக 17 போட்டிகளிலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் சென்னை அணி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 10வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் தோல்வியை பெற்று வந்தாலும் இறுதியாக விளையாடிய போட்டிகளில் வென்று அசத்தி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மொத்தம் 4 முறை கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவரவர் ஹாம் மைதானத்தில் நடைபெற இருக்கின்ற காரணத்தால் சென்னை அணி வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.
16.25 கோடி சென்னை அணிக்கு வீணா ?
ஐபிஎல் 2023 ஏலத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியால் 16.25 கோடி விலை கொடுத்து கைப்பற்றினர். அதனால் சென்னை அணிக்கு வலுவான மிடில் ஆர்டர் இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனென்றால், முதல் இரு போட்டிகளில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் விளையாட முடியாமல் போனது. கடந்த 6 போட்டிகளில் விளையாடாமல் பென் ஸ்டோக்ஸ் பெஞ்ச்-ல் இருக்கிறார். இருப்பினும் இன்றைய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பிட் ஆக இருப்பது போல தகவல் வெளியானது.
அதனால் இனிவரும் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் ப்ளேயிங் 11ல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெற்றால் தீக்ஷண அல்லது மொயின் அலி-க்கு வாய்ப்பு கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது.
பென் ஸ்டோக்ஸ்- – ஐ தேர்வு செய்தது சரிதான ?
பென் ஸ்டோக்ஸ் இதுவரை வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, காயம் காரணமாக பவுலிங் செய்ய முடியாமல் தவித்து வருகிறார் ஸ்டோக்ஸ். இவரது பங்களிப்பு இல்லாமல் சென்னை அணி இப்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ளனர்….! 16.25 கோடி விலை கொடுத்து பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியது சரியா ? தவறா ??