அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி இருக்க மாட்டாரா ; சிஎஸ்கே அணிஎடுத்த முடிவு ; முழு விவரம் இதோ ;

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டி மிகவும் பிடித்துவிட்டது. அதனால் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது…! இதுவரை 14 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது…!

அதிக ரசிகர்கள் கொண்டே அணி எது என்று கேட்டால்..! அது அனைவருக்கும் தெரியும்..! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் என்று. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வருவது நம்ம தல மகேந்திர சிங் தோனி தான்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு எதிராக இருந்தது. ஆனால் இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. பின்னர் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதி வெற்றியை கைப்பற்றியது சென்னை.

நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்பொழுது அடுத்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இரு அணிகள் புதிதாக அறிமுகம் ஆகா போவதாக பிசிசிஐ முன்பே கூறியுள்ளது. அதேபோல, லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது.

அதனால் அடுத்த ஐபிஎல் 2022யில் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற போவதாகவும், முன்பு இருக்கு 8 அணிகள் தல 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் யார் யார் 4 பேரை ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக்கொள்ள போகிறது என்ற குழப்பம் எழுந்தது.

அப்படி பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளஸிஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை தான் தக்க கொள்ள போவதாக தெரிகிறது. ஆனால் தீடிரென்று ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் மகேந்திர சிங் தோனி, தன்னை சிஎஸ்கே அணியில் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று அவரே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது…! நடந்தது என்ன ?? ஒரு அணியில் நான்கு வீரர்களை தக்க வைத்து கொண்டால் 42 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதே 3 வீரர்கள் தக்க வைத்தால் 33 கோடி செலவு செலவு செய்ய வேண்டியிருக்கும். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மட்டுமில்லை அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஒரே விதிமுறை தான். சமீபத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் அளித்த பேட்டியில் ;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னை (தோனி ) தக்க வைத்தால் நிறைய பணம் அதில் செலவாகும். அதனால் அவ்வளவு பணம் செலவு செய்து என்னை எடுக்க வேண்டுமா ?? என்று கூறியுள்ளார் தோனி. ஆனால் சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன் அழைத்த பேட்டியில் ;

மகேந்திர சிங் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை ; சென்னை சூப்பர் கின்ஸ் அணி இல்லாமல் தோனி இல்லை என்று கூறியுள்ளார். அப்படி பார்த்தால் நிச்சயமாக தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஒருவேளை தோனி சிஎஸ்கே அணி கைவிட்டால் நிச்சயமாக தோனி-யை கைப்பற்ற அனைத்து அணிகளும் போட்டிபோட்டுக் கொண்டு மகேந்திர சிங் தோனியை கைப்பற்ற நினைக்கும் என்பதில் சந்தேகமில்லை…!!! என்ன செய்ய போகிறது சிஎஸ்கே என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..!

ஐபிஎல் ரசிகர்களே நீங்கள் சொல்லுங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி இருக்க வேண்டுமா ?? இல்லை வேண்டாமா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….! உங்கள் கருத்தை மற்றவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.