வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ரத்து செய்ய போகிறதா பிசிசிஐ ; காரணம் இதுதான் ;

0

வருகின்ற 6ஆம் முதல் தொடங்க உள்ளது பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும். சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை பெற்றுள்ளது இந்திய.

சில தினங்களுக்கு முன்பு தான் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான 18 பேர் கொண்ட வீரர்களை பட்டியலை வெளியிட்டது. அதில் ரவி பிஷோனி போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மூன்று ஒருநாள் போட்டிகள் அஹமதாபாத்-ல் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்திலும், டி-20 போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

இந்த முறையும் கொரோனா தாக்கத்தை மனதில் கொண்டு ரசிகர்கள் யாரும் மைதானத்திற்கு வந்து பார்க்கும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது பிசிசிஐ. ஆனால் இப்பொழுது போட்டிகள் நடைபெறுமா ?? என்பதே கேள்வி குறியாகியுள்ளது. ஆமாம் ..! நேற்று தான் இந்திய வீரர்கள் அனைவரும் ஒரு இடத்தில் வந்து சேர்ந்தனர்.

அப்பொழுது அவர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதிலும் குறிப்பாக ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன செய்ய போகிறது இந்திய அணி ? போட்டிகள் நடைபெறுமா ?? இல்லையா ? என்று ரசிகர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான அணி :

கே.எல்.ராகுல், கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷோனி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான்.

டி-20 போட்டிக்கான அணியின் விவரம் இதோ :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்) , இஷான் கிஷான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், ரவி பிஷோனி, அக்சர் பட்டேல், அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் பட்டேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here