இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் மும்பை இண்டிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தியாவில் கொரோனா அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதனால் முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி அணியின் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செய்தி சொல்லும் நபருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை விட வான்கடே மைதானத்தில் வேலை செய்யும் ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் முன்பை மைதானத்தில் போட்டிகள் நடைபெறுமா ?? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ உறுப்பினர் கங்குலி நிச்சியமாக சொன்ன தேதியில் அனைத்து போட்டிகளும் நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறியுள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதனால் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை மைதானத்தில் தான் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 144 தடை உத்தரவு என்று மஹாராஷ்டிரவின் முதல்வர் கூறியுள்ளர். அதனால் போட்டி நடக்காதே என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்னும் நிலைமை மோசம் ஆனால் மும்பைக்கு பதிலாக ஹைதராபாத் மைதானத்துக்கு மாற்றலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி..கொரோனா தாக்கம் எப்போது முழுவதாக நிக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அதுவரை மிகவும் பாதுகாப்பாக இருக்கவும் முடியாது. அதனால் வீரர்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும் என்று சுக்ல கூறியுள்ளார்.
இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் .. ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் உட்சகத்தில் இருக்கின்றனர்.