இந்த இரு இந்தியா வீரர்கள் டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதி உள்ளவர்கள் …! முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் அதிரடி கருது…!

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் இந்திய அணியில் அறிமுகம் ஆன இஷான் கிஷான் மற்றும் சூர்யா குமார் யாதவ் ஆகிய இருவரும் அவரவர் அசத்தலான ஆட்டத்தை டி-20 சீரியஸ் போட்டிகளில் காட்டியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் களமிறங்கியா இஷான் கிஷான் 32 பந்தில் 56 ரன்களை எடுத்துள்ளார்.

இரண்டாவது போட்டியில் இஷான் கிஷான் அடித்த அரைசதம் இந்தியா கிரிக்கெட் அணியின் வெற்றி முக்கியமான காரணம் என்று கூட சொல்லலாம். 4வது டி-20 போட்டியில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 31 பந்தில் 57 ரன்களை எடுத்துள்ளார்.

இறுதி டி-20 போட்டியில் சூரியகுமார் யாதவ் யாதவ் 17 பந்தில் 32 ரன்களை எடுத்துள்ளார். முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணியின் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் அளித்த பேட்டியில் ; சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் டி-20 உலகக்கோப்பைக்கான போட்டியில் அணியில் இருப்பார்களா என்று கேட்டால் அது தெரியாது. ஏனென்றால் இளம் வீரர்கள் அனைவரும் அவரவர் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை யார் சரியாக பயன்படுத்துறார்கள் என்று பார்க்க வேண்டும் ; வி.வி.எஸ்.லட்சுமண் கூறியுள்ளார்.

ஆனால் நிச்சியமாக 15 பேர் கொண்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் வி.வி.எஸ்.லட்சுமண். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் கோச் சஞ்சய்; இன்னும் டி-20 உலககோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி வருகின்ற ஐபிஎல் 2021 போட்டியில் பல வீரர்கள் அவரவர் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். அதனால் அதனை வைத்துதான் முடிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இன்னும் இந்தியா அணியில் நிறைய இடங்கள் காலியாக இடத்தை நிரப்ப சரியான ஆட்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.

புவனேஸ்வர் குமார்டி-20 உலகக்கோப்பை அணியில் இருப்பாரா என்ற கேள்விக்கு சஞ்சய் பதிலளித்துள்ளார்; எந்த சந்தேகமும் வேண்டாம் புவனேஸ்வர் குமார் ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி ஆனால் போதும். அவர் இப்பொழுதே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.