மும்பை இந்தியன்ஸ் அணி PlayOff க்கு வர வேண்டும் என்றால்..! இது நடந்தே ஆகணும் ; முழு விவரம் இதோ….;

IPL 2021: ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததால் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் உடனடியாக போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பிசிசிஐ.

அதன் தொடர்ச்சி இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் நாட்டில் சிறப்பாக வருகிறது. இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் இதுவரை மும்பை அணி 11 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? வாய்ப்புகள் உள்ளதா ??

ஒரேவாய்ப்பு தான் இருக்கிறது. கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் ஒரே மாதிரி தான் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் கொல்கத்தா 4 வது இடத்திலும் மும்பை 5வது இடத்திலும் உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் நெட் ரன் ரேட் தான்.

கொல்கத்தா அணி +0.363 என்றும் மும்பை அணி -0.453 என்ற விகிதத்தில் உள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு நல்ல ஒரு கடிமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் என்ன செய்ய போகிறார்கள் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள அதில் டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகளை எதிர்கொள்ள போகிறது. ஆனால் கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது மும்பை.

வெற்றிபெறுமா ? ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த 2019 மற்றும் 2020 கோப்பைகளை கைப்பற்றிய பெருமை மும்பை இந்தியன்ஸ் அணியையே சேரும். ஆனால் இந்த முறை ??