இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 329 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா மற்றும் தவான் இருவரின் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக இருந்தது.
அதன்பின்னர் பேட்டிங் செய்த விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் தொடர்ந்து ஆட்டம் இழந்ததால், இந்திய அணியின் ரன்கள் மிகவும் குறைவாக தான் இருந்தது. ஆனால் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டம் இங்கிலாந்து அணியை அதிரவைத்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்திய அணி வீரர்களின் ரன்கள் விவரம்; ரோஹித் சர்மா 37 ரன்கள், தவான் 67 ரன்கள், விராட் கோலி 7 ரன்கள், ரிஷாப் பண்ட் 78 ரன்கள், கே.எல்.ராகுல் 7 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 64 ரன்கள், குர்னல் பாண்டிய 25 ரன்கள், தாகூர் 30 ரன்கள், புவனேஸ்வர் குமார் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
330 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பாக்காத வகையில் இங்கிலாந்து அணியில் இளம் வீரர் சாம் கரண் இறுதிவரை விளையாடி ஆட்டம் இழக்காமல் 95 ரன்களை எடுத்துள்ளார்.
ஒருவேளை சாம் காரனுக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் அமைந்திருந்தால் நிச்சியமாக இங்கிலாந்து அணி வெற்றி கைப்பற்றிருக்கும். இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பார்ட்னெர்ஷிப் அமையாதது தான் காரணம் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர்.
Also Read : தோனியிடம் இதை பற்றி சாம் கரண் பேசியே ஆகா வேண்டும் ; ஜோஸ் பட்லர் அதிரடி கருது…! என்ன தெரியுமா..?
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் அளித்த பேட்டியில்; 50வது ஓவரில் பந்து வீசிய நடராஜனுக்கு இதய துடிப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும்?? அதனை நம்மால் உணரமுடியாது. அவருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டி,இறுதி ஓவரில் பந்து வீசுவது. இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி இறுதி ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார் நடராஜன் , இது மிகவும் பெரிய விசியம் தான் என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன்.
நிச்சியமாக இறுதி ஓவரில் பந்து வீசும் அனைவருக்கும் பயம் இருக்கும். ஏனென்றால் அதிக ரன்கள் கொடுத்துவிட்டால் அணியின் வெற்றி பறிபோய்விடும் என்று. இந்திய அணிக்கு வேற அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லாததால் புதிதாக அணியில் இணைந்த நடராஜனை நம்பி இறுதி ஓவர் கொடுக்கப்பட்டது.
அவருக்கு நிச்சியம் அதிக பயமும், அதிக பொறுப்பும் அந்த நேரத்தில் இருந்துள்ளது. ஏனென்றால் அவரால் அணியின் வெற்றி பறிபோய்விடக்கூடாது. அதனை புரிந்த நடராஜன் சிறப்பான பந்து வீச்சால் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதனால் இந்தியா கிரிக்கெட் அணி 7 ரன்கள் வித்தியசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
அதனால் நிச்சியமாக இந்திய வெற்றி நடராஜனின் பங்களிப்பும் இருக்கிறது என்று பலர் கூறியுள்ளனர்? உங்கள் கருத்தை ?? கீழே கமெண்ட் பண்ணுங்க …!