வீடியோ : செம..! Acting இது ; Catch இல்லையென்று தெரிந்தும் Catch பிடித்தது போல காண்பித்த கேன் வில்லியம்சன் ; நெட்டிசன்களின் பதிவு ;

0

33வது போட்டி : நேற்று காப்பா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

போட்டியின் விவரம் இதோ :

தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். ஐவரும் இணைந்து 130க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஆட்டம் இழந்தனர். அதன்பின்பு விளையாடிய எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே சென்றனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 179 ரன்களை அடித்தனர். அதில் ஜோஸ் பட்லர் 73, ஹேல்ஸ் 52, மொயின் அலி 5, லிவிங்ஸ்டன் 20, ஹார்ரி புரூக் 7, பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி.

தொடக்க வீரரான கான்வெ மற்றும் பின் ஆலன் போன்ற இரு வீரர்களும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் கேப்டனான கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை குவித்தனர்.

இருப்பினும் முக்கியமான பார்ட்னெர்ஷிப் இழந்த நியூஸிலாந்து அணிக்கு சரியான விக்கெட் அமையாமல் போனது. அதனால் இறுதி ஓவர் வரை போராடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 159 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய.

இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தை நெட்டிசன்கள் வெச்சு காமெடி செய்து வருகின்றனர் : உண்மையில் நடந்தது என்ன ?

முதலில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து அணி அதிரடியான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்கள். சரியாக 5.2 ஓவரில் நியூஸிலாந்து பவுலர் சான்டனர் வீசிய பந்தை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் எதிர்கொண்டு அடித்தார். அப்பொழுது அந்த பந்தை பிடிக்க கேன் வில்லியம்சன் பறந்தார்.

ஆனால் அது எதிர்பாராத விதமாக தரையில் பட்டது. ஆனால் பந்து தரையில் படாதது போல நினைத்து கொண்டு விக்கெட் என்ற நினைப்பில் பந்தை காட்டி சென்றார் கேன் வில்லியம்சன். பின்பு டிவி நடுவரின் உதவியால் அது விக்கெட்டை இல்லை என்று கூறினார்கள்.

இதனை நெட்டிசன்கள் கேன் வில்லியம்சன் ஒரு ஏமாற்றி விளையாடும் வீரர் என்று பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இது போன்ற ஏமாற்றிய பாகிஸ்தான் வீரரான அகமத் ஷெஹசாட் உடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டு வருகின்றனர். அதன்வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஆனால் உண்மையிலும் அது விக்கெட்டை இல்லை என்பது கேன் வில்லியம்சன்-க்கு தெரியவில்லை. பின்பு அது விக்கெட் இல்லை என்ற அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கேன் வில்லியம்சன். அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here