என்னது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக மாறியுள்ள அணி இதுதான் ? இந்திய எந்த நிலையில் உள்ளது ; முழு விவரம் இதோ ;

0

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் கோப்பை கடந்த ஆண்டு தான் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது அதில் கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி வென்று முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன்பின்னர், டெஸ்ட் போட்டிக்கான ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பின்னர் இப்பொழுது 2021 – 2023 ஆம் ஆண்டு போட்டிக்கான டெஸ்ட் போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது ? தெறியுமா ? இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அப்படியே எதிர்மாறாக வெற்றியை பெற்றுள்ளது தென்னாபிரிக்கா அணி. இதனால் என்ன ஆச்சு புள்ளிப்பட்டியளில் ? இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி 8 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னெறியுள்ளது.

இந்திய சிரிக்கெட் அணி அப்படியே நான்காவது இடத்தில் உள்ளது, அதுவும் 53 புள்ளிகளுடன். முதல் இடத்தில் இலங்கை, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா, மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான், நான்காவது இடத்தில் இந்திய, ஐந்தாவது இடத்தில் தென்னாபிரிக்கா, ஆறாவது இடத்தில் பங்களாதேஷ், ஏழாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ், எட்டாவது இடத்தில் நியூஸிலாந்து மற்றும் இறுதியாக ஒன்பதாவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

ஆனால் இதற்கு மேல் ஏதாவது போட்டிகளில் இந்திய அணி தோல்வி பெற்றால் நிச்சியமாக புள்ளிப்பட்டியளில் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறிய இந்திய அணி இந்த முறை கோப்பை வெல்லுமா ? நிச்சியமாக நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை தென்னாபிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றியதே இல்லை. இப்பொழுது சமமாக இருக்கும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி யார் என்று முடிவு செய்ய போகிறது. தென்னாபிரிக்கா அணியை வென்று தொடரை கைப்பற்றுமா இந்திய கிரிக்கெட் அணி ?? இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி இல்லாத காரணத்தால் இந்தியா அணியை வழிநடத்துவதில் கே.எல்.ராகுல் சரியாக இல்லையோ..? என்ற கேள்வியும் சமுகவலைத்தளங்களில் எழுகின்றன.

அதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சியமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனான விராட்கோலி அணியில் இடம்பெருவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வெற்றியை கைப்பற்றுமா ?? இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பதிவு செய்யுங்கள் …!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here