நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
அதனை அடுத்து நாளை முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தான் அணியை வழிநடத்த போகிறார். ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்படும் நேரத்தில் ஷிகர் தவானை கேப்டனாக நியமனம் செய்வது வழக்கம் தான்.
ஆனால் ரோஹித் சர்மா, விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய செய்த தவறை ஷிகர் தவான் செய்வாரா இல்லையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் மூன்று சர்வதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட கூடிய அளவிற்கு ஆட்கள் இந்திய அணியில் உள்ளனர்.
அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் -க்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்தினரா என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை.
டாஸ் பந்து அல்லது பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதில் சிக்கலை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 போட்டியில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் 13, 0 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இவரை போன்ற வீரருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுப்பதற்கு பதிலாக 28வயதான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் 1271 ரன்களை அடித்திருக்கிறார். ஒரு போட்டியில் சராசரியாக 47.07 ரன்களை அடித்துள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் விளையாடிய 9 சர்வதேச ஒருநாள் போட்டியில் 292 ரன்களை விளாசியுள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 73 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரை விட சஞ்சு சாம்சன் பேட்டிங் திறன் அதிக அளவில் இருக்கிறது தான் உண்மை. ஆனால் ஏன் ? அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 13 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் மிடில் ஆர்டர் வலுவாக இருந்திருக்கலாம். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நாளை நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் ஆவது சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ?? அல்லது ஹர்டிக் பாண்டிய, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் செய்த தவறை மீண்டும் செய்ய போகிறாரா ஷிகர் தவான்..!