இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசியா கோப்பை போட்டிகள் சமீபத்தில் தான் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் 2024 ஆசிய கோப்பையை வென்றுள்ளனர்.
இதனை அடுத்து வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி முதல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும் உலகக்கோப்பை போட்டியில் அணியின் விவரத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் விவரம் :
ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டிய, சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்டுல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, முகமத் சிராஜ், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, அக்சர் பட்டேல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்
மீண்டும் இவருக்கு வைப்பு உண்ட ?
கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் சூர்யகுமார் யாதவ். அவர் டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாட சாதனைகளை செய்து வருகிறார். அப்படி இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலைமையில் தான் இன்னும் விளையாடி வருகிறார்.
ஆமாம், டி-20 போட்டியில் இருக்கும் பங்களிப்பு ஒருநாள் போட்டிகளில் வெளிப்படுத்துவதில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பை 2023ல் சூரியகுமார் யாதவ் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். ஆனால் ப்ளேயிங் 11ல் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஏனென்றால், ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் ரன்களை அடிக்காத நிலையில் சூரியகுமார் யாதவிற்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்கி சிறப்பாக விளையாடி உள்ளனர். அதனால் நிச்சியமாக ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் சூர்யகுமார் யாதவிற்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்புகள் மறுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.