இந்தியா கூட இந்த டீமை கம்பேர் பண்ணவேகூடாது, நம்ம டீம் வேற லெவல்; முன்னாள் வீரர் ஓபன் டாக்…!!

0

இந்திய அணியுடன் இப்போது இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை ஒப்பிடவே முடியாது என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்றோர் இல்லாதபோதும், ஆதிக்கம் செலுத்தி முதல் போட்டியை அபாரமாக வென்றுள்ளது இந்தியா. தென்ஆப்பிரிக்க அணியில் எல்கர் மற்றும் மார்க்ரம் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, நிலைத்து நின்று ஆட கூடிய அளவிற்கு தென்ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் இல்லை. 

மிடில் ஆர்டரில் பவுமா மற்றும் டி காக் இருவரும் சிறிது நேரம் நின்று விளையாட கூடியவர்கள். தற்போது டி காக் ஓய்வு முடிவை அறிவித்து தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் தென்ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. பந்துவீச்சில் ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் நன்றாக செயல்படுகின்றனர். இருவரில் ஒருவர் அன்றைய நாளில் செயல்படத் தவறினால் இந்திய அணிக்கு அதுவும் சாதகமாக அமையும். 

இதனால் இனிவரும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரம் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே அபாரமாக இருக்கிறது. பீல்டிங்கில் சொல்லவே வேண்டாம், இந்திய அணி அதிலும் உச்சம் தான். இதனை வைத்து தற்போதிருக்கும் இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியுடன் ஒப்பிட்டு பேசவே முடியாது என கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன்சிங்.

“இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே தென் ஆபிரிக்க அணி பலவீனமாக இருக்கிறது என தெரிவித்தேன். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டால், முற்றிலும் மாறுபட்ட மைதானத்தில் விளையாடுவது போல இருக்கும். ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படும் விதத்தை பார்க்கையில் பலம் பொருந்திய அணியாக இந்தியா காணப்படுகிறது.

இப்போது இருக்கும் இந்திய அணியுடன் தென்னாப்பிரிக்க அணியை ஒப்பிட்டு பேசவே முடியாது. எந்த விதத்திலும் சமமாக இல்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டையும் கைப்பற்றும் அளவிற்கு ஆக்ரோஷமாக தெரிகிறார்கள். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்பட்டார்கள் என முதல் இன்னிங்சில் நன்றாக தெரிந்தது. நிச்சயம் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும்.” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here