ஹார்டிக் பாண்டிய ஒன்னும் இவர்களை போல் இல்லை…!! வி.வி.எஸ்.லட்சுமன் அதிரடி பேட்டி…!  முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021போட்டிகள் தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். இதுவரை 16 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

இதனிடையே ஐபிஎல் வீரர்கள் பற்றி பல முன்னாள் கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்தை பற்றி பகிர்ந்து வருகின்றனர். அதேபோல வி.வி.லட்சுமன் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். எந்த ஒரு இளம் வீரர்களை வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தோனி தான், ஒரே சுனில் கவாஸ்கர், ஒரே கபில் தேவ் தான் இருக்கின்றனர்.

இப்பொழுது இருக்கும் இளம் வீரர்களையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு பேசுவதால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் ஏற்படும். சமீபத்தில் ஹார்டிக் பாண்டிய முன்னாள் இந்திய வீரரான கபில் தேவ் போல இருக்கிறார் என்று செய்தி வெளியானது. அதற்கு முக்கியமான காரணம் ஹார்டிக் பாண்டிய நல்ல ஒரு பேட்ஸ்மேன் மற்றுமின்றி நல்ல இரு பவுலரும் கூட.

ஆல் – ரவுண்டர் ஆக இருப்பது மிகவும் கடினம். இங்கிலாந்துக்கு எதிரான இறுதி இரண்டு ஒருநாள் போட்டியில் ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்யவில்லை. அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஆரம்பித்து சில போட்டிகள் முடிந்த நிலையில் ஹார்டிக் பாண்டிய இன்னும் பவுலிங் செய்யவில்லை.

அதனால் இப்பொழுது பவுலிங் செய்யாத நிலையில் உள்ளார் ஹார்டிக் பாண்டிய, இந்த நிலையில் அவரை கபில் தேவிடம் ஒப்பிட்டு பேசினால் நிச்சியமாக அவரது மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் வி.வி.லட்சுமன்.