2018 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மறந்துவிட்டீர்களா ?? வார்னர்-க்கு உதவி செய்த ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான் ; முன்னாள் இந்திய வீரர் அதிரடியான பேட்டி ; என்ன உதவி தெரியுமா ??

ஐபிஎல் 2022;

ஐபிஎல் 2022 போட்டியின் பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் 2022 ஏலம் :

ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் இணைந்துள்ளது. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி தான், அணைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு கடந்த ஐபிஎல் 2021 போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது.

ஏனென்றால் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி முதலில் விளையாடிய 7 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. பின்னர் டேவிட் வார்னர்-க்கு மிகப்பெரிய அழுத்தம் சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் வார்னர்-க்கு பதிலாக நியூஸிலாந்து அணியின் கேப்டனான கென் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். பின்னர் வார்னருக்கு அணியில் சரியான வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் அவரே வெளியேற போவதாக அறிவித்தார்.

ஐபிஎல் 2021 போட்டிக்கு பிறகு நடைபெற்ற உலகக்கோப்பை ஐசிசி டி-20 போட்டியில் டேவிட் வார்னர் தான் அதிக ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை கிரிக்கெட் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் அளித்த பேட்டியில் ; சமூகவலைத்தளங்களில் வார்னர்-ஐ அணியில் வெளியேற்றிய சன்ரைசர்ஸ் அணியை தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது சரி இல்லை.

ஏனென்றால் கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் சில தவறான செயலில் ஈடுபட்டதால் அவரை ஓர் ஆண்டு எந்த போட்டியிலும் விளையாட கூடாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியது.

இருந்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி 2018ஆம் ஆண்டு போட்டியில் விளையாடவில்லை என்றாலும் அணியில் இருந்து வெளியேற்றாமல் அவரை மீண்டும் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட வைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. இதனை யாரும் மறக்கவே கூடாது என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.