இனிமேல் இந்திய அணியின் கேப்டனாக இவர் விளையாட கூடாது ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் நேற்று காலை முதல் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள். முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த பங்களாதேஷ் அணி 73.5 ஓவர் முடிவில் 227 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக ஷாண்டோ 24, சாகிர் ஹசன் 15, மொமினுள் 84, ஷகிப் 16, ரஹீம் 26 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர். பங்களாதேஷ் அணியை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக தான் நடந்துள்ளது. ஆமாம், இந்திய அணியின் தொடக்க வீரர்களான புஜாரா, கே.எல்.ராகுல், சுப்மன் ஆகிய மூன்று வீரர்களும் விக்கெட்டை இழந்துள்ளனர்.

36 ஓவர் முடிந்த நிலையில் 3 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 86 ரன்களை அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 10, சுப்மன் 20, புஜாரா 24, விராட்கோலி 18*, ரிஷாப் பண்ட் 12* ரன்களை அடித்துள்ளனர். இன்னும் இந்திய கிரிக்கெட் அணி குறைந்தது 141 ரன்களை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். இரண்டாவது போட்டியிலும் வெல்லுமா இந்திய அணி ?

மோசமான நிலையில் விளையாடும் இவர் இந்திய அணியின் கேப்டன ?

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், இரு டெஸ்ட் தொடரிலும் விளையாட முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளார். அதனால் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் கே.எல்.ராகுலை கேப்டனாக அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்த முடிவு சரியான ஒன்ற ?

ஏனென்றால் கடந்த சில போட்டிகளாகவே மோசமான நிலையில் விளைய்டி கொண்டு இருக்கும் கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. அதற்கு பதிலாக ரிஷாப் பண்ட் அல்லது புஜாரா கேப்டனாக இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் இதுவரை 22, 23, 10 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்.

இந்த அளவிற்கு மோசமான நிலையில் தொடக்க வீரராக விளையாடினால் இந்திய அணியால் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் ? பவுலரான குல்தீப் யாதவ் ஒரே இன்னிங்ஸ்-ல் 40 ரன்களை அடித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்பது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here