இப்பொழுது இந்திய மற்றும் இலங்கை அணிக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இருக்கிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அதனால் 1 – 0 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் ஓப்பனிங் வீரரான பிருத்வி ஷாவ் மிகச்சிறந்த அதிரடியான வீரர். 40 க்கு மேற்பட்ட ரன்களை சுலபாக அடிக்க கூடிய சிறந்த வீரர்.
அதற்காக ஒருநாள் போட்டியில் (50 ஓவர்) 100 ரன்களை அடிக்க சொல்லி அவருக்கு மன அழுத்தம் கொடுப்பது சரியில்லை. அவர் ஓப்பனிங் வீரர் அதனால் அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்று சூழல் அவருக்கு ஏற்படுத்த கூடாது. அவரை அவர்போக்கில் விளையாட வைக்க வேண்டும்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டி-20 போட்டியில் விளையாடுவது போல 24 பந்தில் 43 ரன்களை விளாசியுள்ளார். அதாவது 179.17 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் பிருத்வி ஷாவ். எனக்கு அவரது அடித்த ரன்கள் சந்தோசமாக தான் இருக்கிறது.
இன்று மதியம் 3 மணி அளவில் இரண்டாவது ஒருநாள் நடைபெற போகிறது. ஆனால் அதில் பிருத்வி ஷாவ் இடம்பெறுவாரா இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் முதல் ஒருநாள் போட்டியில் பிருத்வி ஷாவ்-க்கு தலையில் அடிபட்டு விட்டது. ஒருவேளை அவர் இல்லை என்ற பிருத்வி ஷாவ்-க்கு பதிலாக யார் இடம்பெறுவார்கள் ?
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் தொடரை கைப்பற்ற அதிகம் வாய்ப்பு இருக்கும். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து தான் பார்க் வேண்டும்.