இந்திய அணியில் இவரை எடுக்கவே கூடாது ; டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாட சொல்லுங்க ; முன்னாள் வீரர் ஆதங்கம் ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று மாலை முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

புதிய மற்றும் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு :

இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் மற்றும் புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் போதும் சுலபமாக அணியில் இடம்பெற்றுவிடலாம் என்ற நிலை இப்பொழுது உருவாகியுள்ளது.

அதிகமான வீரர்கள் இப்பொழுது இந்திய அணியில் இருப்பதால் யாருக்கு எப்பொழுது வாய்ப்புகளை கொடுப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியே 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தாலும் ப்ளேயிங் 11 வீரர்களை சரியாக முடிவு செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் சிறப்பாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர் தான் உம்ரன் மாலிக். அவரது அதிவேகமான பந்து வீச்சு முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால், இந்திய கிரிக்கெட் அணியில் உம்ரன் மாலிக் வீசும் அளவிற்கு யாரும் வேகமாக பந்து வீசுவது இல்லை.

ஐபிஎல் 2022யில் தொடர்ந்து வேகமாக பந்து வீசிக்கொண்டு வந்தனர். அதனால் அவரை அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் உம்ரன் மாலிக் விளையாடினார்.

ஒரு பவுலர் என்றால் ரன்களை குறைவாக கொடுத்து விக்கெட்டை கைப்பற்ற வேண்டும், அல்லது ரன்களை மட்டும் ஆவது குறைவாக கொடுக்க வேண்டும். ஆனால் உம்ரம் மாலிக் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4 ஓவர் பவுலிங் செய்து 56 ரன்களை கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான மதன் லால் கூறுகையில் ; “டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இவரை தேர்வு செய்ய வேண்டாம். டெஸ்ட் போட்டிகளில் விளையாட வையுங்கள். அவர் ஒரு நல்ல பவுலர் தான், ஆனால் சிறப்பான பவுலராக மாற்ற வேண்டும்.”

“டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுங்கள், அப்பொழுது தான் விக்கெட்டை எப்படி கைப்பற்ற வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும். வேகமாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றால் எந்த பலனும் இல்லை. அனுபவம் இல்ல வீரர் இவர். அதனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அந்த அனுபவம் நிச்சியமாக அவருக்கு (உம்ரன் மாலிக்) கிடைக்கும்.”

“நான் தேர்வாளராக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை அணியில் கைப்பற்றிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மதன் லால்”. இவர் சொல்வது போல இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர உம்ரன் மாலிக் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here