இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு கண்டு வருகின்றனர். அதில் இந்திய அணி டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய. அதிலும் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.


அதுமட்டுமின்றி அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி-20போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டு வருகின்றனர். அதிலும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பல புதிய மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ. அதில் இருந்து 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான டேரன் கூறுகையில் ;
“இந்திய அணியில் இடம்பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால் அதில் ஷமி சிறப்பாக பவுலிங் செய்து அதிக விக்கெட்டை கைப்பற்றி வருகிறார். அதேபோல தான் ஜஸ்பிரிட் பும்ராவும் சிறப்பாக விளையாடி விக்கெட்டை கைப்பற்றி வருகிறார்.”


“அதனால் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக மாறியுள்ளது. அதில் ஒருவர் சிராஜ். எனக்கு தெரிந்து புவனேஸ்வர் குமாரை ஒருநா போட்டிக்கான வீரராக மாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் புதிய பந்தில் அவரது திறமை நிச்சியமாக வெளிப்படும்.”
“அவரால் (புவனேஸ்வர் குமார்) ஸ்விங் பவுலிங் செய்ய முடியும். அதனால் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். அவரது திறமையை பற்றி எந்த விதமான யோசனையும் தேவையில்லை. ஏனென்றால் புதிய பந்தில் சிறப்பாக ஸ்விங் பவுலிங் செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது.”


“அவரை போன்ற பல பவுலர்களை ஸ்விங் பவுலிங் செய்ய முயற்சிகளை செய்தனர். ஆனால் புவனேஸ்வர் குமாருக்கு இருக்கும் திறமையை பற்றி யோசிக்க வேண்டியதே இல்லை. இவரால் நிச்சியமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பாக பவுலிங் செய்ய முடியும் என்று கூறியுள்ளார் ட்ரென்.”
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் புவனேஸ்வர் குமார். உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? பவுலிங் வலுவாக இருக்குமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!