இரண்டு ஆண்டுகள் கழித்துதான் இந்த கிரிக்கெட் போரா ?அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..! முழு விவரம் இதோ ;

Asia Cup : உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து போட்டிகளையும் சிறிது நாட்கள் கழித்தோ அல்லது ஒரு ஆண்டுகள் கழித்து போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் கிரிக்கெட் போட்டியும் உள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் பலமான பாதுகாப்புடன் ஆரம்பித்த ஐபிஎல் 2021 போட்டிகள் சிறப்பான முறையில் நடித்து வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்ததால், உடனடியாக ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

அதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதேபோல உலகத்தில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் தாமதமாக தான் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டிகளிலும் சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஏசியா கோப்பை கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 2021, ஐபிஎல் டி-20, டி-20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் சூப்பர் லீக், போன்ற விளையாட்டுகள் நடைபெற உள்ளது.

சமீபத்தில் ஏசியன் கிரிக்கெட் வாரியம் அளித்த பேட்டியில் ; இந்த ஆண்டும் ஏசியா கோப்பை நடக்காது என்றும், இன்னும் இரு ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர். இறுதியாக 2018ஆம் ஆண்டு ஏசியா கோப்பையை வென்றது இந்திய அணி.

2018ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஏசியா கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுய் கோப்பையை கைப்பற்றது குறிப்பிடத்தக்கது.