கொல்கத்தா அணியால், மும்பை அணி மீண்டும் Play-Off க்கு வர அதிகமான வாய்ப்பு வந்துள்ளது ; முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2021 போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு போட்டிகளை பார்த்து ரசித்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல தான்,இந்த முறை எந்த எந்த அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் என்று தெரியாமல் இருக்கிறது.

ஆனால் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு கூட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் ஒரே நிலையில் இருந்தனர்.

ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதுவரை 11 போட்டிகளில் விளையாடிய 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீதம் மூன்று போட்டிகள் உள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் போட்டியில் வெற்றிபெற்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை யாராலும் தடுக்கவே முடியாது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் மீதமுள்ள போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் போன்ற அணிகளை எதிர்கொள்ள போகின்றனர். அதனால் சில கடினமான போட்டிகளை நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

ஒருவேளை கொல்கத்தா அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து விட்டால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு என்பது அதிகரித்து கொண்டே இருக்கும். ஆனால் கொல்கத்தா அணி ஒன்றும் அவ்வளவு மோசமான அணி இல்லை..!

அதனால் யார் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு இடம்பெற போகிறார்கள் என்பதை யாராலுமே கணிக்க முடியாது…! இன்னும் சில போட்டிகள் முடிந்த நிலையில் யார் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது தெரிந்துவிடும். உங்களுக்கு பிடித்த அணி எது ? ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதா ? Comment பண்ணுங்க..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here