இன்று இரவு 8 மணியளவில் தொடங்கிய நான்காவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.


அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்தனர். இருப்பினும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 33, சூரியகுமார் யாதவ் 24, தீபக் ஹூடா 21, ரிஷாப் பண்ட் 44, சஞ்சு சாம்சன் 30*, தினேஷ் கார்த்திக் 6, அக்சர் பட்டேல் 20* ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
சரியான பார்ட்னெர்ஷிய அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் ரன்களை அடிக்க முடியவில்லை. இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 132 ரன்களை அடித்தனர்.


அதில் அதிகபட்சமாக பிராண்டன் கிங் 13, மாயேர்ஸ் 14, நிக்கோலஸ் பூரான் 24, போவெல் 24, ஹெட்மயேர் 19 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 3 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருப்பதால் தொடரையும் கைப்பற்றியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
இதற்கிடையில் ரிஷாப் பண்ட் செய்த ஒரு செயல் ரோஹித் ஷர்மாவை கோவமாக்கியது. 5வது ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாட தொடங்கினார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அது பின்னடைவாக இருந்தது.
சரியாக 4.5 பந்தில் பூரான் எதிர்பாராத விதமாக ரன்- அவுட் ஆனார். அப்பொழுது பந்தை பிடித்த ரிஷாப் பண்ட் ரன் அவுட் செய்யாமல் நிக்கோலஸ் பூரானை பார்த்து கொண்டு இருந்தார். அப்பொழுது கிட்ட வந்த ரோஹித் சர்மா பந்தை பிடித்தவுடன் ஸ்டும்ப்பில் அடித்துவிட்டு என்று கூறியுள்ளார்.
Rohit Sharma scolding pant for his very slow run out 😂😂😂 pic.twitter.com/TpJofnrhMh
— Sachin (@Sachin72342594) August 7, 2022
அதன்விடேவ் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை இந்த ரன் – அவுட் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.