HomeTrending Newsவீடியோ : பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே பந்தில் 7 ரன்களை பெற்றுள்ளது ...

வீடியோ : பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே பந்தில் 7 ரன்களை பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி ; ரன் கொடுக்கலாம் அதற்கு இப்படியெல்லாம் ஆ ? அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்

லத்தம் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், மொமினுள் ஹயூ தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மூன்று டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதனால் இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் உள்ள நிலையில் இப்பொழுது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி ரன்களை அடித்து தொம்சம் செய்துவிட்டனர். ஆமாம்..! முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 128.5 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 521 ரன்களை அடித்துள்ளனர். அதில் கேப்டனான லத்தம் 252, யூங் 54, கான்வே 109, டாம் பிளுண்டேல் 57 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் நியூஸிலாந்து அணி declare செய்துள்ளது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கி விளையாடி வருகிறது பங்களாதேஷ் அணி. இதுவரை 38.5 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 119 ரன்களை மட்டுமே அடித்துள்ளது பங்களாதேஷ் அணி. இன்னும் கிட்டத்தட்ட 400 ரன்களை அடிக்க வேண்டிய சூழல் பங்களாதேஷ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய வந்த நியூஸிலாந்து அணி, 27வது ஓவர் முதல் பந்தை வீசினார் ஹொசைன், அதனை எதிர்கொண்டார் நியூஸிலாந்து வீரர் யங், அப்பொழுது அவர் அடித்த பந்து பவுண்டரி கிட்டே சென்றதால் மூன்று ரன்களை ஓடியே கைப்பற்றியது நியூஸிலாந்து அணி.

ஆனால் அதே நேரத்தில் மீண்டும் விக்கெட் கீப்பர் ஸ்டும்ப்பிங் செய்வது போல பந்தை வேகமாக வீசினார், ஆனால் எதிர்பாராத விதமாக பந்து பவுண்டரி சென்றது. அதனால் மொத்தமாக 7 ரன்களை நடுவர் கொடுத்தார். அதன்வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

வீடியோ :

அதனால் இந்த முறை டெஸ்ட் போட்டி நிச்சியமாக நியூஸிலாந்து அணி தான் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. முதல் இன்னிங்ஸ்-ல் இன்னும் 400 ரன்களை அடிக்க வேண்டிய சூழல் பங்களாதேஷ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் உள்ளது. அதனால் நியூஸிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img