மேட்ச் 30; துபாய் சர்வதேச மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பொல்லார்ட் தலைமையிலான முன்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.


சிஎஸ்கே அணிக்கு தொடக்கத்தில் ஆட்டம் சரியாக அமையவில்லை. அதுமட்டுமின்றி சுரேஷ் ரெய்னா, டுபலஸிஸ் மற்றும் மொயின் அலி ஆகிய மூன்று வீரர்களும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். ஆனாலும் இறுதி ஓவர் வரை இன்று அதிரடியாக ரன்களை குவித்தார் ருதுராஜ்.
நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த இழந்த நிலையில் 156 ரன்களை அடித்தது சிஎஸ்கே. பின்பு பேட்டிங் செய்த மும்பை இந்தின்ஸ் அணியின் வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போக போக ஆட்டத்தை இழந்து இறுதிவரை போராடி 136 ரன்களை மட்டுமே எடுத்தது முன்பை.


அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று வெற்றியை கைப்பற்றியது சிஎஸ்கே. அதனால் புள்ளிப்பட்டியளில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கும் முன்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கும் முன்பை அணியை சேர்ந்த டி-காக் தான் காரணம் ;
சிஎஸ்கே சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் தான் அதிகமான ரன்களை அடித்துள்ளர். அவர் 58 பந்தில் 88 ரன்களை விளாசியுள்ளார். இவரை போல வேறு எந்த வீரரும் அடிக்கவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசும்போது 8வது ஓவரை வீசினார் சுழல் பந்து வீச்சாளர் ராகுல் சஹார்.


வீடியோ:
அதனை எதிர்கொண்டார் ருதுராஜ் ; அப்பொழுது பேட்டில் பட்டு கீப்பர் டி-காக் கைக்கு சென்றது. ஆனால் அதனை தவற விட்டார் , அந்த நேரத்தில் ருதுராஜ் வெறும் 19 ரன்களை மட்டுமே அடித்திருந்தார் ருதுராஜ். டி-காக் செய்த சின்ன கவன குறைவால் அந்த விக்கெட் மிகப்பெரிய சக்தியாக மாறியது தான் உண்மை.