HomeTrending Newsஇந்தியாவுக்கு சாதகமாக மாறிய ஆசிய கோப்பை போட்டிகள் ; இந்த முறை கோப்பை இந்தியாவுக்கு தான்...

இந்தியாவுக்கு சாதகமாக மாறிய ஆசிய கோப்பை போட்டிகள் ; இந்த முறை கோப்பை இந்தியாவுக்கு தான் போல ; காரணம் இதோ ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 308 ரன்களை அடித்தனர்.

பின்பு 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், இறுதிவரை போராடிய வ்ஸ்ட் இண்டீஸ் அணி 305 ரன்களை மட்டுமே அடித்தது. அதனால் 3 ரங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

ஆசிய கோப்பை:

இந்திய மற்றும் ஆசிய கோப்பை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய 2022 கோப்பைக்கான போட்டி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளனர். அதில் இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற ஐந்து அணிகள் உறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், குவைத் , சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங் போன்ற அணிகளில் ஏதாவது ஒரு அணி மட்டுமே ஆசிய கோப்பைக்கான போட்டியில் 6வது அணியாக தேர்வு செய்யப்பட உள்ளன. இதுவரை ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 7 முறை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டு எங்கு ஆசிய கோப்பை நடைபெற உள்ளது ?

சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் தான் நடத்த போவதாக தகவல் வெளியானது. இப்பொழுது இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர், இருப்பினும் இலங்கையில் தான் நடக்கும் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் தீடிரென்று இலங்கையில் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் இலங்கையில் வேண்டாம், அதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த போவதாக முடிவு செய்தனர். இதனை சமீபத்தில் தான் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இது மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு சாதகமாக மாறியது தான் உண்மை.

ஏனென்றால் கடந்த 2020, 2021 போன்ற இரு ஆண்டுகளிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியான ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ஆகிய அரபு அமீரகத்தில் தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதனால் மற்ற வீரர்களை விட இந்திய வீரர்களுக்கு அங்கு பிட்ச் எப்படி இருக்கும் ?? எந்த மாதிரி விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று நன்கு தெரியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இன்னும் ஒரு மாதம் இடைவெளி உள்ள நிலையில் எந்த அணியில் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகின்ற அணியின் விவரத்தை பற்றி அறிவிக்கவில்லை. 8வது கோப்பையை வெல்லுமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img