இப்பொழுது இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இடம்பெற வேண்டுமென்றால் உள்ளூர் விளையாட்டுகளில் சிறப்பாகி விளையாட வேண்டும். ஆமாம், அதனால் உள்ளூர் போட்டிகளில் பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் சமீப காலமாக தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 8 அணிகளை கொண்டு ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கோவையில் உள்ள SNR கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. அதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை அணியும், கௌஷிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் கௌஷிக் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் போட்டி தொடங்கும் முன்பு மழை வந்த காரணத்தால் போட்டி சற்று தாமதமாக நடைபெற தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு இருந்தன.
ஆனால் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 65 ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதனால் 17 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 138 ரன்களை அடித்தனர். அதில் கங்கா ஸ்ரீதர் ராஜு 27, சுரேஷ் குமார் 5, சாய் சுதர்சன் 65, ஷாருக்கான் 22 ரன்களை விளாசினார்கள்.
பின்பு 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சூப்பர் கில்லிஸ் அணி. ஆனால் 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 14 ரன்களை அடித்தனர். பின்பு மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் போட்டியை ரத்து செய்து இரு அணிகளும் போட்டியில் வென்றதாகவும் கோப்பை இரு அணிகளுக்கும் தான் என்று கூறியுள்ளனர்.