இந்த விஷயத்தில் இந்திய வீரர்களுக்கு பயமாக தான் இருக்கிறது ; ஆனால் விடமாட்டோம் ; ரிஷாப் பண்ட் ஓபன் டாக் ;

0

இன்று மதியம் 12:30 மணியளவில் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட்கோலி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் கலந்துகொள்ளவில்லை. இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க போவதால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாபே தொடருக்கான போட்டியில் விளையாட போகும் இந்திய அணி விவரம் :

கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஷிகர் தவான், சுமன் கில், ராகுல் த்ரிப்தி, தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், அவேஷ் கான், முகமத் சிராஜ், குல்தீப் யாதவ், தீபக் சஹார், இஷான் கிஷான், பிரஷித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Indian Team

ஜிம்பாபே அணிக்கு பிறகு ஆசிய கோப்பை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் மற்றும் இறுதியாக டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிகளுக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஆசிய கோப்பையை விட உலகக்கோப்பை போட்டிகள் தான் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் உலகக்கோப்பை போட்டிகளை பற்றி சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.

அதில் “அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது, அதனால் நான் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணியும் பதட்டமாக தான் இருக்கிறது. இருப்பினும், இந்திய வீரர்கள் நிச்சியமாக 100 சதவீதம் நிச்சியமாக விளையாடுவோம். இது மட்டும் தான் எங்கள் கையில் உள்ளது.”

“நிச்சியமாக இந்த ஆண்டு இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும், முடிந்தவரை நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். ஒரு இந்திய வீரராக எங்களுக்கு மக்களிடம் இருந்து அதிக ரசிகர்களை எதிர்பார்க்கிறோம். அவர்களது உற்சாகம் நிச்சியமாக எங்களை சிறப்பாக விளையாட வைக்கும்.”

“கடந்த 2020-2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நான் விளையாடிய ஆட்டத்தை என்றும் மறக்கவே மாட்டேன். அதில் நான் அடித்த ரன்கள் இந்திய அணிக்கு உதவியாக இருந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.”

இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 போட்டியில் ரிஷாப் பண்ட் சொன்னது போல, இறுதி போட்டி வரை முன்னேறுமா ?? இந்திய அணி ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here