டூப்பலஸிஸ் மற்றும் ப்ராவோவுக்கு காயம் ..!! சிஎஸ்கே அணியில் விளையாடுவார்களா ?? இல்லையா ..? முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2021; கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது .பின்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது.

பின்பு சில தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ. 29 போட்டிகள் முடிந்த நிலையில் ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ. பின்பு அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்தது பிசிசிஐ.

மீதமுள்ள 31 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு நாட்டில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி இப்பொழுது ஐபிஎல் வீரர்கள் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ஒரே ஆண்டு என்றால் அது கடைசி ஆண்டுதான். ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் அதுதான் முதல் முறை சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு நேர் எதிர்மாதிரி தான்.

ஏனென்றால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. ஆனால் இப்பொழுது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சி.பி.எல் போட்டிகளில் ப்ராவோ மற்றும் டுபலஸிஸ் ஆகிய இருவரும் விளையாடி வந்தனர்.

அதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் முதலில் நடக்கும் ஒருசில போட்டிகளில் இருவரும் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒருவேளை டுபலஸிஸ் இல்லையென்றால் ஓப்பனிங் யார் பேட்ஸ்மேன் ஆக விளையாடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அனைத்தையும் சமாளித்து இந்த முறை ஆவது கோப்பையை கைப்பற்றுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here