கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் டி-20 லீக் போட்டியாக அறிமுகம் ஆனது தான் ஐபிஎல். பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.


அதுமட்டுமின்றி, உலக கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் புகழ் பெற்ற போட்டி எது ? என்றால் அது நிச்சியமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி-20 லீக் போட்டி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 மொத்தம் 8 அணிகளை கொண்டு நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு இரு புதிய அணிகளை அறிமுகம் செய்தது பிசிசிஐ.
ஐபிஎல் பேட்டிகளில் மிகவும் பிரபலமான அணி எது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். ஏனென்றால் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை அணியை தல மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இருப்பினும் கடந்த ஆண்டு இரு புதிய அணிகள் அறிமுகம் ஆனதால் மெகா ஏலம் நடைபெற்றது.
அதனால் 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி சென்னையில் தோனி, ரவீந்திர ஜடேஜா, ரூட்டுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலியை தக்கவைத்து சென்னை அணி. அதனால் தொடக்க வீரரான டூப்ளஸிஸ் -ஐ அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.


பின்னர் ஏலத்தில் டுப்ளஸிஸ் ஐ- சென்னை அணி முயற்சி செய்தாலும் , இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை கைப்பற்றியது மட்டுமின்றி கேப்டனாகவும் அறிவித்தனர். அதனால் சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக மாறியது தான் உண்மை.
ஐபிஎல் போட்டியை போலவே தென்னாபிரிக்கா டி-20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் போட்டிகளில் அணிகளை வைத்திருக்கும் ஒரு சில நிர்வாகம் தான் தென்னாபிரிக்கா லீக் போட்டிகளிலும் அணிகளை வாங்கியுள்ளனர். அதில் சென்னை அணியின் நிர்வாகம் ஜோகன்ஸ்பர்க் அணியை வாங்கியுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , அதே தென்னாபிரிக்கா அணிக்கு ஜோகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரையும் வைத்துள்ளனர். இதில் டூப்ளஸிஸ் தான் கேப்டனாக விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ப்ராவோ, இம்ரான் தாஹிர், பிரிட்டோரியஸ் போன்ற சென்னை வீரர்கள் தான் ஜோகன்ஸ்பர்க் அணியில் விளையாட போவதாகவும் வெளியாகியுள்ளது.


அதுமட்டுமின்றி, அந்த அணியில் தோனியை ஆலோசகராவும், பிளெம்மிங் பயிற்சியாளராகும் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இது நடந்தால் ஐபிஎல் பெற்ற வரவேற்பை நிச்சியமாக தென்னாபிரிக்கா டி-20 லீக் போட்டிக்கும் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.