அட கொடுமையே..! ஒழுங்கவே விளையாடமாட்டார் என்று நினைத்தால் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து விட்டார்…!

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை 29 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது….! இந்த முறை இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியுமா ?? என்று கேட்டால் அது சந்தேகம் தான்….!

நேற்று 29வது போட்டியில் ஈயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணி மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 163 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 9, ஜோஸ் பட்லர் 101, மலன் 6, பரிஸ்டோவ் 0, மோர்கன் 40 மொயின் அலி 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி.

ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால் 19 ஓவர் வரை போராடி அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்துவிட்டு 137 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இப்பொழுது இங்கிலாந்து அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயின் மோர்கன் ஒரு சாதனை செய்துள்ளார். இதுவரை சர்வதேச டி-20 போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கிய 72 போட்டிகளில் 42 போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணியும் ஒரே கேப்டனால் தலைமை தாங்கி 42 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளின் சாதனையையும் முறியடித்தார் ஈயின் மோர்கன்.

நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடி இங்கிலாந்து அணி வெற்றியை கைப்பற்றியது. அதனால் ஈயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 68 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி 43 போட்டிகளில் வென்றுள்ளது….!!

இந்திய அணி இதுவரை இரு போட்டிகளில் விளையாடி அதிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது இந்திய. அதனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி அணியில் இல்லாததால் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்…!

இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள், டி-20, சாம்பியன் கோப்பை போன்ற அனைத்து ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிய சிறப்பாக வழிநடத்தி இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்று கொடுத்தே ஒரு வீரர் என்ற பெருமை தோனியை மட்டுமே சேரும்…!

இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை 2021யில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இல்லாததை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!