சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ஆர்மபித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். 15வது போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதுவரை இந்த இரு அணிகளும் 24 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 15 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 8 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் அதிகபட்சமாக 220 ரன்களை அடித்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்கள், டுப்ளஸிஸ் 95 ரன்கள், மொயின் அலி 25 ரன்கள், தோனி 17 ரன்கள் அடித்துள்ளனர்.
பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. இருந்தாலும் 6வதாக பேட்டிங் செய்த ஆன்ட்ரே ரசல் மின்னல் வேகத்தில் சரமாரியாக ரன்களை அடித்தார். அதிரடியாக விளையாடிய ரசல் 34 பந்தில் 66 ரன்களை எடுத்துள்ளார், அதில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் விளாசியுள்ளார்.
இறுதிவரை போராடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 விக்கெட் இழந்த நிலையில் 202 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வைத்து இடத்திலும் உள்ளது.
வீடியோ ; மோர்கன் அடித்த கிண்டலில் கடுப்பான டுப்ளஸிஸ் தக்க…பதிலடி கொடுத்துள்ளார். வைரலாகும் வீடியோ..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 15வது ஓவரை கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பந்து வீசினார். அதனை எதிர்கொண்ட டுப்ளஸிஸ், Full- Toss வீசிய காரணத்தால் அடிக்க முடியமால் திணறினர்.
அப்பொழுது அதனை ஈயின் மோர்கன் பார்த்து கிண்டல் செய்தார். அதனை பார்த்து கடுப்பான டுப்ளஸிஸ் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.