HomeIPLதோனியே நினைத்தாலும் இவருக்கு சிஎஸ்கே அணியில் இடம்கிடைக்காது ; அதிர்ச்சியில் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ;

தோனியே நினைத்தாலும் இவருக்கு சிஎஸ்கே அணியில் இடம்கிடைக்காது ; அதிர்ச்சியில் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ;

ஐபிஎல் டி20 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் இருந்து நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் (லக்னோ மற்றும் அகமதாபாத்) போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. அதில் பழைய அணிகள் அனைத்தும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது.

அதேபோல, புதிய ஒரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று வீரர்களை அணியில் எடுக்கலாம் என்று பிசிசிஐ கூறியது. ஐபிஎல் டி20 லீக் போட்டியில் அதிக வெற்றிகளை மைப்பற்றிய அணிகளும் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார் தல மகேந்திர சிங் தோனி.

சிஎஸ்கே அணி என்றாலே தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா தான் அனைவருக்கும் நியபகர்த்திற்கு வரும். ஆனால் இப்பொழுது இவர்கள இருவரது காலம் முடிவுக்கு வந்தது தான் உண்மை. ஆமாம்.. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு 2020யில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்கள். அதனால் இன்னும் சில ஆண்டுகள் தான் ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னாவை வெளியேற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் யார் போட்டியில் வெல்ல போகிறார்கள் என்ற கேள்வியை விட தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகள் விளையாடுவார் என்று கேள்வி எழுந்தன.

அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் சொத்து என்று நினைத்து கொண்டு இருந்தன. ஆனால் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி மற்றும் மொயின் அலி போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே அணி. அதில் சுரேஷ் ரெய்னா இல்லை என்பது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெருவாரா ? என்ற கேள்வி சமுகவலைத்தளங்களில் எழுந்து வருகின்றன. ஆமாம்…! ஆனால் நிச்சியமாக சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இன்னும் சில ஆண்டுகளில் கூடிய விரைவில் ஓய்வு பெற போகின்ற சுரேஷ் ரெய்னாவை அணியில் தக்கவைப்பது சிரமம் தான். அதுமட்டுமின்றி, சமீப காலமாக சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் சரியாக இல்லாத காரணத்தால் அவரை சிஎஸ்கே அணிய மீண்டும் பார்ப்பது சிரமம் தான்.

கிரிக்கெட் ரசிகர்களே….! நீங்களே சொல்லுங்க…! சுரேஷ் ரெய்னா எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பண்ணுங்க…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img