HomeTrending Newsஐபிஎல் : மும்பை அணி ஏலத்தில் தக்கவைக்காதது , இவருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது ;...

ஐபிஎல் : மும்பை அணி ஏலத்தில் தக்கவைக்காதது , இவருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது ; ரசிகர்கள் வருத்தம்;

இப்பொழுது உலகத்தில் பெரிய போட்டிகளில் ஒன்றாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி தான். அதிலும் வெற்றிகரமான ஒரு போட்டி என்றால் ஐபிஎல் டி-20 லீக் போட்டி தான். ஆமாம், கடந்த 2008ஆம் இந்தியாவில் அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் தொடருகள் சிறப்பாக நடைபெற்றது.

டி-20 போட்டி என்பது மிகவும் குறுகிய நேரத்தில் நடக்கும் போட்டியாகும், அதனால் கிரிக்கெட் ரசிகர்களும் பிடித்த ஒன்றாக மாறியது. பின்பு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று வருகிறது என்பது தான் உண்மை.

இதுவரை மொத்தம் 15 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5முறையும், சென்னை அணி 4 முறையும் அதிகபட்சமாக கோப்பையை வென்றுள்ளனர். ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் போன்ற இரு புதிய அணி அறிமுகம் ஆனது.

அதனால் பெரிய அளவில் நடத்த முடிவு செய்த பிசிசிஐ, அதிகபட்சமாக அணிக்கு நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்கள். அதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, பொல்லார்ட், சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற முன்னணி வீரர்களை தக்கவைத்துக்கொண்டனர்.

இருப்பினும் ஹர்டிக் பாண்டிய, குர்னல் பாண்டிய, இஷான் கிஷான் போன்ற வீரர்களை தக்கவைக்கப்படவில்லை. இருப்பினும் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக விலை கொடுத்து இஷான் கிஷானை கைப்பற்றியுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியளரான ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் ;

“மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தக்கவைக்காதது, மும்பை ரசிகர்களுக்கு மற்றுமின்றி அவருக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆமாம், அந்த நேரம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சவாலாக தான் இருந்திருக்கும். ஏனென்றால், இஷான் கிஷான், ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களில் இருந்து மூன்று வீரர்களை மட்டுமே அதிகபட்சமாக தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.”

“இதற்கிடையில், ஹர்டிக் பாண்டியவை குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றி கேப்டனாக அறிவித்தது. ஹர்டிக் பாண்டியாவுக்கு ஐபிஎல் 2022யில் பல பொறுப்புகள் வழங்கப்பட்டது, அதனால் தான் அவரால் சிறப்பாக விளையாட முடிந்தது. பொறுப்பு கொடுத்தால் தான் பேட்டிங் மற்றும் பீல்டிங் தாண்டி சிறப்பாக விளையாட முடிந்தது தஎன்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 7 சீசன்களில் சிறப்பாக விளையாடி கொண்டு வந்தார் ஹர்டிக் பாண்டிய. உண்மையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்டிக் பாண்டிய இடம்பெறாதது பின்னடைவாக தான் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்டிக் பாண்டிய எந்த அளவிற்கு முக்கியமான வீரர் ?

உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகிறது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img