இந்திய கிரிக்கெட் எங்களை வென்றாலும் பரவாயில்லை ; ஆனால் ஒருபோதும் இதை விட்டுக்கொடுக்கமாட்டோம் ; பாகிஸ்தான் வீரர் உறுதி

0

கிரிக்கெட் :

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் விதமான தான் அமைந்துள்ளது. ஆமாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு ஒரு மாதமாக எந்த விதமான போட்டிகளிலும் விளையாடாமல் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

ஒருநாள் உலக கோப்பை 2023 :

உலகி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி எங்கள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளனர்.

உலக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போட்டி :

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்பொழுதுமே ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால், இந்த இரு அணிகளுக்கு இடையே எந்த விதமான சீரியஸ் போட்டிகளும் நடைபெறாத.

முக்கியமான போட்டிகளான உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடி கொண்டு வருகின்றனர். அதேபோல தான் இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியின் விவரம் :

இதுவரை 132 ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் 55 போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர். இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் நிச்சயமாக இந்திய அணியின் வெற்றியை முக்கியமான கவனிப்பார்கள்.

பாகிஸ்தான் வீரர் பேட்டி :

எப்பொழுதும் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த போட்டி வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு இந்திய அணியை வெல்லவது நோக்கமில்லை. இந்தியாவிடம் தோற்றாலும் உலகக்கோப்பையை வெல்வதே எங்களுடைய நோக்கம் என்று கூறியுள்ளார் ஷதாப் கான்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here