HomeTrending Newsஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் முன்ணனி வீரர் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் முன்ணனி வீரர் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

நேற்று தான் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற இந்திய பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் 45 ஓவர் விளையாடிய இங்கிலாந்து அணி 259 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் (கேப்டன் ) 60, மொயின் அலி 34, வில்லே 18 ரன்களை அடித்தனர்.

பின்பு இந்திய கிரிக்கெட் அணி 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதனால் விக்கெட்டை இழந்த வந்த நிலையில் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்தது இந்திய.

அந்த நேரத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் (ரிஷாப் பண்ட்) மற்றும் ஆல் – ரவுண்டரான (ஹர்டிக் பாண்டிய) பெரிய அளவில் பார்ட்னெர்ஷிப் செய்து இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக மாறியது. அதனால் இந்திய அணி 42 ஓவர் முடிவில் 261 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகள் முடிந்த நிலையில் இப்பொழுது இங்கிலாந்து அணியின் முன்னணி நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதனை பற்றி பேசிய பென் ஸ்டோக்ஸ் ; ” மூன்று (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட்) விதமான போட்டிகளிலும் விளையாடினால், நிலைக்க முடியாது. ஒருநாள் போட்டியில் இறுதியாக இங்கிலாந்து அணியில் நாளை நடைபெற உள்ள போட்டியில் விளையாட போகிறேன்.”

“அதன்பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் இந்த கஷ்டமான முடிவுகளை எடுக்க முடிந்தது. சக வீரர்களுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக தான் இருந்தேன். என்னால் இந்த ஒருநாள் போட்டிகளில் 100 சதவீதம் விளையாட முடியவில்லை.”

“என்னால் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது, அது என்னால் முடியாது. அதுமட்டுமின்றி, நான் அணியில் இருக்கும்போது ஜோஸ் பட்லர் மற்றும் மற்ற வீரர்களுடைய இடத்தை நான் கைப்பற்றியது போல தோன்றுகிறது.”

“நான் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த வீரருக்கு சரியான நேரம் அமைந்தால் நான் கடந்த 11 ஆண்டுகள் என்ன செய்தேனோ, அதனை அவரும் செய்வார்.இந்த முடிவுக்கு பிறகு என்னால் 100 சதவிதம் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட முடியும். அதுமட்டுமின்றி, ஜோஸ் பட்லர், மத்தியூ மோட், மற்றும் சக வீரர்கள் என்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.”

பென் ஸ்டோக்ஸ் இதுவரை 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2919 ரன்களை அடித்துள்ளார். அதில் மூன்று சதம் மற்றும் 21 அரைசதம் அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img