கடந்த 2015ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, முதல் முதலாக மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக விராட் கோலி விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏன் தோனிக்கு என்ன ஆச்சு? எதனால் விராட்கோலி விக்கெட் கீப்பிங் செய்தார் ? ஒருநாள் போட்டி என்பதால் 50 ஓவர் வரை மைதானத்தில் விளையாட வேண்டியுள்ளது. அதில் 44வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்து வீசினார். அப்பொழுது தோனிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டியதால் அவருக்கு பதிலாக விராட் கோலியை விக்கெட் கீப்பிங் செய்து விட்டு சென்றார் தோனி.
இதற்கான தோனியை கிண்டல் செய்வதை விட …? ஏன் ஒருநாள் போட்டிகள் நடக்கும் போது டாய்லெட் பிரேக் ஏன் தருவதில்லை என்று யோசிக்க வேண்டும்??? பிசிசிஐ இதனை கவனத்தில் கொண்டு சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளார்.
வீடியோ:
இதுவரை விராட் கோலி, 7490 ரன்களை டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ளார். அதேபோல ஒருநாள் போட்டியில் 12169 ரன்களை எடுத்துள்ளார் மற்றும் டி-20 போட்டிகளில் 3159 ரன்களை விளாசியுள்ளார். இதுவரை விராட்கோலி 70 சதம் அடித்துள்ளார். அதில் ஒருநாள் போட்டியில் 43 சதம் மற்றும் டெஸ்ட் போட்டியில் 27 சதம் அடித்துள்ளர்.
ஆனால் இன்னும் ஒரு டி-20 போட்டிகளிலும் கூட சதம் அடிக்கவே இல்லை விராட்கோலி. டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 254 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 183 ரன்களையும், டி-20 போட்டிகளில் 94 ரன்களையும் அடித்துள்ளார் விராட்கோலி.