ஐசிசி உலகக்கோப்பை : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலகக்கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.
இந்திய அணியில் இருக்கும் சிக்கல் ?
கடந்த மாதம் உலகக்கோப்பை டி-20 போட்டியில் பங்கேற்க போகும் இந்திய வீரர்களின் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல்,புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்டிக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட்கோலி இடம்பற்றுள்ளார்.
இதில் இந்திய அணியின் முன்னணி பவுலரான ஜஸ்பிரிட் பும்ராவிற்கு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பயிற்சி செய்து கொண்டு இருந்த நேரத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
பும்ரா இடத்தில் எந்த வீரர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் “முகமத் சிராஜ் நிச்சியமாக பும்ராவிற்கு பதிலாக அணியில் இடம்பெற வேண்டும். ஏனென்றால் முகமத் சிராஜ் சிறப்பாக லென்த் பவுலிங் செய்து வருகிறார்.”
“அதுமட்டுமின்றி அவரது பவுலிங் நிச்சியமாக ஆஸ்திரேலியா மைதானத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் வாட்சன்.” ஆனால் சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் அவ்வப்போது மட்டுமே விளையாடி வரும் முகமத் சிராஜ் இந்திய அணியில் இடம்பெற்றால் அது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் ?
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற தீபக் சஹார் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரன்களை கட்டுப்படுத்தியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் உலகக்கோப்பை போட்டிக்கான காத்திருப்பு பட்டியலில் தீபக் சஹார் இருக்கிறார்.
அதனால் பும்ராவிற்கு பதிலாக தீபக் சஹார் இந்திய அணியில் இடம்பெற்றால் சிரப்பான பவுலிங் அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, தீபக் சஹார் அவ்வப்போது பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களையும் அடித்து வருகிறார். நேற்று நடந்த போட்டியில் தீபக் சஹார் 17 பந்தில் 31 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.