IPL வீரர் Corona காரணமாக உயிர் இழந்துள்ளார்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முரையில் நடைபெற்று வந்தது. ஆனால் , யாரும் எதிர்பாராத விதமாக ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்திவைத்துள்ளது பிசிசிஐ .

சில நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அனைத்து கொல்கத்தா வீர்ரகளையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது.

அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஐராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கு வீரருக்கு காரோண தோற்று உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக ஐபிஎல் 2021 போட்டியை ரத்து செய்தனர்.

அதனால் மீதமுள்ள ஐபிஎல் 2021, போட்டிகள் உலககோப்பைக்கு முன் நடந்தால் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, முன்னாள் ஐபிஎல் வீரரான விவேக் யாதவ் கொரோனா தோற்று காரணமாக உயிர் இழந்துள்ளார்.

இவருக்கு (விவேக் யாதவ்) கேன்சர் இருந்துள்ளது. அதனை சரி செய்ய மருத்துவமனை சென்றுள்ளார். ஆனால் எதிர்பார்த்த விதமாக இவருக்கு கொரோனா பரிசோதனையில் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக் யாதவ், ரஞ்சி கோப்பையில் விளையாடி 57 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் சோப்ரா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.