14வது ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் 2021யில், இதுவரை 18 போட்டிகள் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. அணைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிபட்டியலின் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்.
மூன்றாவது இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஏழாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும், எட்டாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனை வெளுத்து வாங்கியுள்ளார் கவுதம் கம்பிர். கடந்து ஆண்டுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித், இந்த ஆண்டு அவரை அணியில் இருந்து விலக்கி இளம் வீரரான சஞ்சு சாம்சனைகேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் கவுதம் கம்பிர், அளித்த பேட்டியில் ; சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டியில் அறிமுகம் ஆன சில ஆண்டுகள் 800 முதல் 900 ரன்களை விளாசியுள்ளார். ஆனால் இப்பொழுது அவரது ஆட்டம் எங்கே என்று தான் தெரியவில்லை. பெங்களூர் அணியின் முக்கியமான வீரரான டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியை பார்த்து இவர் கத்துக்க வேண்டும்.
ஐபிஎல் 2021, முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 100 ரன்களை அடித்தார். ஆனால் அதன்பின்னர் எந்த போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. நான் எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்க சொல்லவில்லை. முதல் போட்டியில் சதம் அடித்த அவர், இரண்டாவது போட்டியில் குறைந்தது 40 அல்லது 50 ரன்களை அடிக்க வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், இப்பொழுது ஜோப்பிர ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இல்லை. சஞ்சு சாம்சன் இப்பொழுது இந்திய அணியில் நிரந்தரமான வீரர் ஒன்றும் இல்லை. அதனால் ஐபிஎல் போட்டியை பயன்படுத்தி அவரது தனித்திறமையை வெளிக்காட்ட வேண்டும்.