இந்திய கிரிக்கெட் அணி : உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறுமா இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
இந்திய அணியின் முழு விவரம் :
விராட்கோலி, ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, ஷர்டுல் தாகூர், ஹார்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், வருண் சக்ரவத்தி போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் நிச்சியமாக ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் ஏற்படும் என்று பல கருத்துக்கள் வந்தனர். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தேர்வாகாமல் இருக்கும் வீரர் யுஸ்வேந்திர சஹால்.
ஏனென்றால் அவர் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் சமீபத்தில் தான் ஐக்கிய அரபு நாட்டில் நடந்துமுடிந்துள்ளது. அதில் மிகவும் அருமையாக விளையாடியுள்ளார் யுஸ்வேந்திர. ஆனால் பிசிசிஐ அப்படி எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் தோனியை இந்திய அணியின் உடையில் கான ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி அளித்த பேட்டியில் ; உலகக்கோப்பை விளையாட உள்ள, இந்திய அணிக்கு சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், உலகக்கோப்பையை மட்டும் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க கூடாது.
இந்திய அணி விளையட போகின்ற, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். வெற்றி ஒன்று அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடாது. எப்பொழுதும் ஒரு போட்டியின் முடிவுகளை விட, அதா போட்டியில் நாம் என்ன செய்கிறோம் என்பதை தான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் போட்டியில் நடக்கும் தவறுகளை அடுத்த போட்டியில் சரி செய்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார் கனகுலி….!! கடந்த 2007 ஆம் தோனி தலைமையிலான இந்திய அணி தான் முதல் முறையாக கோப்பையை ஐசிசி டி-20 வென்றுள்ளது. அதன்பிறகு இன்னும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை…!
இந்த முறையாவது இந்திய அணி ஐசிசி டி-20 2021 போட்டிகள் வெற்றி பெறுமா ?? இல்லையா என்று நீங்கள் Comments பண்ணுங்க …..!!!