இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் விளையாட்டை மதிப்பிட்டுள்ளார் சவுரவ் கங்குலி, அதில் விராட்கோலிக்கு சிறப்புக் குறிப்பு அளித்துள்ளார்.

0

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாட சென்றனர். அதில் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி-20, ஒருநாள் போட்டிகள் நடைபெற இருந்தன. அதன்படி இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளும் வெற்றிகரமான நடந்து முடிந்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்று 2 – 2 என்ற கணக்கில் சம நிலையில் இருந்த காரணத்தால் டெஸ்ட் போட்டிக்கான தொடர் ட்ரா ஆனது. பின்னர் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டி விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 259 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60, ஜேசன் ராய் 41, மொயின் அலி 34, ஓவெர்ட்டன் 32 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்கத்தில் நான்கு விக்கெட்டை தொடர்ந்து இழந்தாலும், ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவருக்கு இடையே சிறப்பாக பார்ட்னெர்ஷிப் அமைந்த காரணத்தால் இந்திய அணியால் இலக்கை எட்ட முடிந்தது.

42.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 261 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது இந்திய. அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 125, ஹர்டிக் பாண்டிய 71, விராட்கோலி 17, ரோஹித் சர்மா 17 ரன்களை அடித்துள்ளனர். வெற்றியது கைப்பற்றிய இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவரது சமூகவலைத்தளங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் “இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி உள்ளீர்கள். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இப்படி வெல்லவது அவ்வளவு சுலபம் இல்லை .”

“டெஸ்ட் போட்டியில் 2 -2 ட்ரா ஆனது. ஆனால் டி-20, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். ராகுல் ட்ராவிட், ரோஹித் சர்மா , விராட்கோலி, ரவி சாஸ்திரி அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதிலும் ரிஷாப் பண்ட் ஒரு ஸ்பெஷல் தான் என்று பதிவு செய்திருந்தார்.”

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் யார் சிறப்பாக விளையாடியுள்ளனர் ? அணியாக வெற்றி பெற்றாலும் , தனி நமபராக யார் சிறப்பாக விளையாடியுள்ளனர்….??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here