Advertisement
HomeTrending Newsஇது கங்குலி-க்கு தேவை இல்லாத வேலை ; அவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் ; கங்குலியை...

இது கங்குலி-க்கு தேவை இல்லாத வேலை ; அவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் ; கங்குலியை வெளுத்து வாங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் ; முழு விவரம் இதோ ;

அட…அட… இன்னும் விராட்கோலி மற்றும் கங்குலி ஆகிய இருவருக்கும் இடையேயான பேச்சு ஓய்ந்த போன மாதிரி கொஞ்சம் கூட தெரியவில்லை.. விராட்கோலி மற்றும் கங்குலி ஆகிய இருவருக்கு என்ன நடந்தது ?

உலகக்கோப்பை போட்டி முடிந்த பிறகு நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலியே அறிவித்தார். பின்னர், தீடிரென்று ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலியை நீக்கியுள்ளது பிசிசிஐ.

இந்த விஷயம் விராட்கோலி-கே தெரியாது..! ஆனால் இதனை பற்றிய பேசிய கங்குலி, நான் டி-20 போட்டிகளின் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என்று சொன்னேன், ஆனால் அவர் தான் கொஞ்சம் கூட கேட்கவில்லை. இதனை பற்றி இந்திய அணியின் தேர்வு குழு பேசியதில், இனியும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் மற்றும் டி-20 போட்டிக்கு இன்னொரு கேப்டன் என்று இருக்க முடியாது.

அதனால் தான் விராட்கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விளக்கியதாக பிசிசிஐ கங்குலி கூறினார். ஆனால் இதனை பற்றி பேசிய விராட்கோலி, என்னிடம் யாரும் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று சொல்லவே இல்லை என்று கூறினார் விராட்.

அதில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் கங்குலியை பற்றிய விமர்சனம் நடந்து கொண்டே தான் வருகிறது. அதேபோல, இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் கூறுகையில்; கங்குலி-க்கு தேர்வு குழு சார்பாக பேசுவதற்கு ஒரு துளி கூட சம்மந்தம் கிடையாது.

இப்பொழுது இந்திய அணியின் கேப்டன் சரியில்லையா, அல்லது தேர்வு செய்வதில் பிரச்சனை உள்ளதா ?? அப்படி இருந்தால் தான் கங்குலி இதனை பற்றி பேச வேண்டும். விராட்கோலி இந்திய அணியை பெருமை படுத்தியுள்ளார், அதுமட்டுமின்றி, இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார்.

அவரை வெளியனுப்பிய போது மரியாதையாக அனுப்பியிருக்க வேண்டும். இந்திய அணி ஆரம்பித்த காலத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கு கேப்டன்கள் இருந்தார்கள், ஆனால் விராட்கோலி அப்படி கிடையாது. பிசிசிஐ கையாண்ட விதம் நிச்சயமாக விராட்கோலியை வருத்தத்தில் ஆழ்த்திருக்கும் என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் திலீப் வெங்சர்க்கார்.

ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் ஓய்ந்து நிலையில், இப்பொழுது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular